அமலாக்கத்துறை காவல் அதிகாரிகள் கிடையாது, கைது செய்யவும் உரிமை கிடையாது: சுப்ரீம் கோர்ட்டில் வாதம்..!

புதன், 26 ஜூலை 2023 (14:58 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் சற்றுமுன் விசாரணை தொடங்கியது.
 
இதில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தபோது, ‘அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் கிடையாது, எப்படி அவர்கள் கைது செய்ய முடியும்? கடத்தல் வழக்கில் சுங்கத்துறையினருக்கு கைது செய்ய அதிகாரமில்லை என்பதுபோல் ED-க்கும் அதிகாரமில்லை
 
சுங்க அதிகாரி சம்மந்தப்பட்ட நபரை பிடித்து காவல்துறையில்தான் ஒப்படைக்க முடியும்; இது அமலாக்கத்துறைக்கும் பொருந்தும்’ என்று வாதம் செய்தார்.
 
நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணை நடந்து வரும் நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆகியுள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்