மாணவிக்கு நீதிக்கேட்டு போய் ஆளுனரின் மகுடிக்கு மயங்கிடாதீங்க விஜய்!?? - விடுதலை சிறுத்தைகள் அறிக்கை!

Prasanth Karthick
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (12:30 IST)

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து ஆளுனர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக விஜய் பேசியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

 

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பல்கலைக்கழக வளாகத்திலேயே வெளிநபர் ஒருவரால் மிரட்டப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டதோடு, ஆளுனர் ஆர்.என்.ரவியையும் நேரில் சந்தித்து சில கோரிக்கைகள் விடுத்தார்.

 

விஜய்யின் ஆளுனருடனான சந்திப்பை தொடர்ந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. விஜய் - ஆளுனர் சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி “தவெக தலைவர் விஜய் ஆளுனரை சந்தித்ததை வைத்து அவருக்கு வாழ்த்து சொல்லி அரசியல் செய்ய பாஜக தலைவர் அண்ணாமலை முயல்கிறார்.

 

ஏற்கனவே தனக்குத்தானே கொடுத்துக் கொண்ட சாட்டையடிக்கு வந்த விமர்சனங்களால் சுருண்டு போய் கிடந்த அண்ணாமலை அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு வருவதற்காக விஜய் கவர்னரை சந்தித்ததை வலிய சென்று வரவேற்கிறார்.
 

ALSO READ: 'சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு `மைக்’ மேனியா’ நோய்: சி.விஜயபாஸ்கர் விமர்சனம்..!

 

நடிகர் விஜய், திராவிட மாடல் என்று திமுகவை கடுமையாக விமர்சித்ததால் அவரால் திமுகவிடம் கோரிக்கை வைக்க முடியவில்லை. எனவே மாணவிக்கு நேர்ந்த துயரம் குறித்து ஆளுனரை சந்தித்து முறையிட்டிருக்கிறார். இது அவரது அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் ஆளுனர் ஒரு சூழ்ச்சிக்காரர். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பரப்பி வருபவர். அந்த சூழ்ச்சி வலைக்கு நடிகர் விஜய் சிக்கிவிடக்கூடாது.

 

பாஜகவின் சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்க வேண்டும் என்பதற்காகதான் அண்ணாமலை பாராட்டியுள்ளார். மாணவிக்கு நீதிகேட்டு சென்ற விஜய், மகுடிக்கு மயங்க மாட்டார் என நம்புவோம்” என தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்