அதிமுகவை மீட்போம்... சசிகலா எடுத்த சபதம் விரைவில் முடிக்கப்படும்!!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (15:35 IST)
அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுகவை ஆரம்பித்தோம் எனவே சசிகலா வெலியே வந்ததும் அவர் இதைத்தான் செய்வார் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று செய்தி வெளிவந்தது.    
 
இந்நிலையில், பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமமுக பொருளாளர் வெற்றிவேல், அதிமுக மீட்டெடுப்பு என்பது நடப்பது உறுதி. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுகவை ஆரம்பித்தோம். எதிர்காலத்திலும் அதேதான் எங்களது குறிக்கோள். 
 
எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களிடம் வாக்கு கேட்கும் முகம் தற்போதைய அதிமுக இரட்டை தலைமையிடம் இல்லை. அதற்கான வலுவான தலைவர்கள் மற்றும் முகங்கள் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் என எங்களிடம் தான் உள்ளது. 
 
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்த்து கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. எங்களிடம் வருவதற்கு அவர்களுக்கும் எவ்வித தயக்கமும் இருக்காது. அணிகள் இணைப்புக்கு பின்னர் முதல்வர் வேட்பாளர் யாராக இருப்பார்கள் என சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்