இத்தனை கட்டுப்பாடுகளை மீறி எதற்கு கிரிக்கெட்?

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (20:15 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நடத்த விடமாட்டோம் என ஒருசில அரசியல் கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.

 
இருப்பினும் திட்டமிட்டபடி போட்டி நடந்தே தீரும் என்றும் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் உறுதிபட கூறிவிட்டது.
 
இந்நிலையில் மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் பேனர்கள், கொடிகள் கொண்டு வரக்கூடாது என்றும் அவை தடை செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்தது. 
 
மேலும், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
 
இதனை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். குடிக்க தண்ணீர் கூட கொண்டு வரக்கூடாது என்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது என்றும், இத்தனை கட்டுப்பாடுகளை மீறி எதற்கு ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்