டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
சிஎஸ்கே அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த நேரத்தில் களமிறங்கிய பிராவோ அதிரடியாக 30 பந்துகளில் 68 ரன்கள் அடித்து வெற்றி நோக்கி அணியை அழைத்து சென்றார். இறுதியில் ஜாதவ் அணியை வெற்றி அடைய செய்தார்.
இந்த வெற்றியை நான் சென்னை ரசிகர்களுக்கு சமர்பிக்க விரும்புகிறேன். அவர்கள்தான் இரண்டு வருடமாக இப்படி ஒரு வெற்றிக்கு காத்து இருந்தது. சென்னை மக்களுக்குத்தான் இந்த வெற்றி சேரும். சிஎஸ்கே அணி என்னை அதிகம் நம்பியது, அதற்காக இப்படி ஆடினேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.