அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

Senthil Velan

புதன், 26 ஜூன் 2024 (17:35 IST)
அவதூறு வழக்கில் வரும் ஜூலை இரண்டாம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவர் மீது கடந்த 2018ம் ஆண்டு பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடுத்தார்.
 
இந்த வழக்கு விசாரணை உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள்  வரும் ஜூலை 2ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

ALSO READ: தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.! ஸ்டாலினுக்கு ராகுல் போட்ட பதிவு..!!
 
ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி 20ம் தேதி அமேதியில் தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு இடையே, சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்