கோயம்பேட்டில் காய்கறிகள் விலை உயர்வு: காரணம் என்ன?

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (10:04 IST)
பெட்ரோல், டீசல் மற்றும் சுங்க கட்டண உயர்வால் சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை ஏற்றம் கண்டிருக்கிறது. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய விலை உயர்த்தப்பட்டுள்ளது பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து தற்போது ரூ. 108.21 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.98.21 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதனால் சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை ஏற்றம் கண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சுங்க கட்டண உயர்வால் லாரிகள் கட்டணம் உயர்ந்தது. லாரிகள் கட்டண உயர்வால் கோயம்பேட்டில் காய்கறிகளின் விலையும் உயர்ந்திருக்கிறது. காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்