பிரதமரிடம் வேட்புமனு பெற்றவர் ஒரு தமிழரா? தந்தையின் நெகிழ்ச்சி பேட்டி..!

Mahendran
புதன், 15 மே 2024 (10:28 IST)
பிரதமர் மோடி நேற்று தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவருடைய வேட்புமனுவை பெற்ற அதிகாரி ஒரு தமிழர் என்று தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி அவரது தந்தை தென்காசியில் இருக்கும் நிலையில் அவர் அளித்த பேட்டியும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரதமர் மோடி நேற்று வாரணாசி தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் எனது மகன் ராஜலிங்கம் தான் பிரதமரிடம் இருந்து பெற்றதாக அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.

தென்காசியில் உள்ள இவர் நாட்டின் முக்கியமான ஒரு மாவட்டத்தில் ஆட்சியராக எனது மகன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் வாரணாசி மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் அவரிடம் தமிழ் சங்கமும் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வாரணாசி நகரமே தூய்மையாக தற்போது காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ராஜலிங்கத்தால் தமிழ்நாடு மற்றும் கடையநல்லூர் பகுதி மக்களும் பெருமை கொள்வதோடு பெற்றோர்களாகிய நாங்களும் பெருமை கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். வாரணாசி தொகுதியில் பிரதமரிடம் இருந்து வேட்புமனுவை பெற்றது ஒரு தமிழர் என்ற தகவல் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்