காங்கிரஸ் ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் நடந்தாலும் பயனில்லை: வானதி சீனிவாசன்

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (17:21 IST)
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல் என்றும் ராகுல் காந்தி நடைபயணம் சென்றாலும் அதனால் எந்தவித பயனும் இல்லை என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று ஒற்றுமை என்ற நடனத்தை தொடங்கி உள்ளார் என்றும் இந்த நடைபயணத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார் என்றும் தெரிந்ததே
 
இன்று தொடங்கும் இந்த நடைபயணம் 150 நாட்கள் கழித்து காஷ்மீரில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நடை பயணம் குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ ’இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியின் நடை பயணத்தின் மூலம் உயிர் ஊட்ட முடியுமா என முயற்சி செய்கிறார்கள் என்று தெரிவித்தார் 
 
மேலும் காங்கிரஸ் ஒரு மூழ்கிய கப்பல் என்றும் ராகுல் காந்தி நடந்தாலும் சரி ஓடினாலும் சரி மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனும் தராது என்று அவர் தெரிவித்தார் அவருடன் எந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்