காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வந்தால் பாஜகவுக்கு நல்லது: அண்ணாமலை

புதன், 7 செப்டம்பர் 2022 (17:13 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வந்தால் பாஜகவுக்கு மிகவும் நல்லது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிடவில்லை என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக இருந்தாலும் அதை விட பாஜகவிற்கு நல்லது என்றும் வரும் பாராளுமன்ற தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தல் ஒரு கபட நாடகம் என்றும் காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவர் தான் தலைவராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்