சசிகலாவுக்கும், சசிகலா குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் அவர்களுக்கு எதிராக மாறி எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறார். ஆனால் அவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் ஐக்கியமான வைத்திலிங்கம் மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிக்கும் என கூற்றப்பட்ட போது தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்து வந்ததாக தகவல் வருகிறது. பிரதமரை சந்தித்து நமக்கான அங்கீரத்தை கேளுங்கள் அவர் செய்து தருவார் என அழுத்தம் கொடுத்தார் வைத்திலிங்கம்.
நான் பேசுறேன் என கூறிய முதல்வர் பிரதமரிடம் இது குறித்து பேசிவிட்டேன் எனவும் வைத்திலிங்கத்துக்கு உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் மத்திய அமைச்சராகிவிடுவேன் என வைத்திலிங்கம் தைரியமாக இருந்திருக்கிறார். ஆனால் இந்தமுறை மத்திய அமைச்சரவையை மாற்றி அமைத்த போது அதிமுக இடம்பெறவில்லை.
இது தொடர்பாக டெல்லியில் ஒருவரிடம் பேசிய வைத்திலிங்கம் அதிமுகவுக்கு நீங்க உரிய அங்கீகாரம் கொடுத்திருக்க வேண்டும். முதல்வர் பேசியும் நீங்க எதுவும் செய்யாமல் விட்டது வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார். ஆனால் நீங்க அமைச்சரவையில் இடம் கேட்டது இதுவரைக்கும் எங்க யாருக்கும் தெரியாது. முதல்வர் எங்க யாரிடமும் இதுபற்றி பேசவும் இல்லை என பாஜக தலைவர் ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த வைத்திலிங்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், சசிகலா குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்த நான் அவர்களை விட்டுவிட்டு உங்களிடம் வந்ததுக்கு என்ன சொல்லனும். என் பின்னாடி வர 6 எம்எல்ஏக்கள் இப்பவும் தயாரக இருக்காங்க. நானும் ஒரு பக்கம் உங்களை எதிர்த்து நிற்கவா? அமைச்சரவையில் இடம் கொடுங்கன்னு கேட்க உங்களுக்கு என்ன கசக்குது? நீங்க மட்டுமே எல்லா பதவியிலும் இருக்கணுமா? நாங்க எல்லாம் அப்படியே உங்க பின்னாடி நின்னுட்டு போயிடணும்னு நினைக்கிறீங்களா? என கொந்தளித்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவோ சமாதானப்படுத்தியும் வைத்திலிங்கம் சமாதானம் ஆகவே இல்லையாம். சீக்கிரமே வைத்திலிங்கமும் தனது ஆதரவாளர்களுடன் அணி மாறினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.