இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஆளுநர் இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை என கூறுவது அழகல்ல. ஆளுநர் மத்திய பாஜக அரசு சொல்வதை செய்கிறார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஒரு வார காலத்திற்குள் உத்தரவிட வேண்டும் என அவருக்கு ஒருவார காலம் கெடு விதித்திருப்பதை வரவேற்கிறேன் என கூறினார்.