எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு இந்தி என்ன குழந்தையின் முத்தமா? கவிஞர் வைரமுத்து

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (12:02 IST)
எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு ஹிந்தி மொழி என்ன குழந்தையின் முத்தமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பி உள்ளார். 
 
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் இந்தியை எதிர்ப்பு இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு தமிழகத்திலிருந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இது குறித்து வைரமுத்து கூறியபோது, ‘தமிழர்கள் இந்தி எதிர்ப்பு உணர்வில் அல்லாமல் இந்தி திணிப்பு எதிர்ப்பு உணர்வில் திளைத்தவர்கள். இந்தியை எதிர்ப்பது, இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பதில் தமிழர்கள் தெளிவாக உள்ளனர்.
 
எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு இந்தி என்ன குழந்தையின் முத்தமா? எனவும் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்