இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கு அனுமதி.. வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு!

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (08:12 IST)
வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை உலகக் கோப்பையில் 10 அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்வது சம்மந்தமாக இழுபறியான சூழல் நிலவியது.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு ஆசியக் கோப்பை தொடருக்கு விளையாட செல்ல மறுத்ததை அடுத்து பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடக் கூடாது என அந்நாட்டில் இருந்து குரல்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் நாட்டு அரசு இந்தியா வந்து உலகக் கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி அளித்துள்ளது.

இது சம்மந்தமாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி “விளையாட்டில் அரசியலைக் கலக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், எனினும் எங்கள் அணிக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து கவலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு குறித்து ஐசிசி மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்