7 வருஷத்தில் இந்திய அணிக்கு இப்படி நடந்ததே இல்லை… மோசமான தோல்வியை சந்தித்த ஹர்திக் &கோ!

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (08:44 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  கடந்த 3ஆம் தேதி நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதையடுத்து நேற்று நடந்த போட்டியிலும் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளையும் தோற்று 2-0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த தொடர் தோல்வியால் இந்திய அணி தொடரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி கடந்த 7 ஆண்டுகளில் சந்திக்காத மோசமான சாதனையை செய்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அணி தொடர்ந்து 2 டி 20 போட்டிகளை தோற்றதேயில்லை. ஆனால் இப்போது அந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தாரைவார்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்