மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றம்!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (12:01 IST)
தற்போது 17 தேதி அறிவிக்கபட்டிருந்த மெகா தடுப்பூசி முகாம் 19 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது.  
 
இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மீண்டும் 17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்தார். ஆனால், தற்போது 17 தேதி அறிவிக்கபட்டிருந்த மெகா தடுப்பூசி முகாம் 19 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்