வந்தது கோவிஷீல்டு... நிறுத்தப்பட்ட தடுப்பூசிகள் பணிகள் மீண்டும் துவக்கம்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (09:04 IST)
2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்ததை தொடர்ந்து சென்னையில் இன்று முதல் மீண்டும் தடுப்பூசிகள் போடும் பணி துவங்கியுள்ளது. 

 
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டு நிலவிய நிலையில், நேற்று மாலை மத்திய அரசின் இலவச தொகுப்பில் இருந்து 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்து சேர்ந்த்து. விமானம் மூலம் வந்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் பாதுகப்பாக தேனாம்பேட்டை DMS வளாகத்தில் உள்ள அரசு மருந்து கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது. 
 
இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் சென்னையில் இன்று முதல் மீண்டும் தடுப்பூசிகள் போடும் பணி துவங்கியுள்ளது. மேலும் ஜூலை மாத ஒதுக்கீடாக தமிழ்நாட்டிற்கு 71 லட்சம் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்