கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மத்திய மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்திலும் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளிலும் ஒருசில தனியார் மருத்துவமனையிலும் தடுப்பு ஊசியை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நேற்று வரை எத்தனை பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறித்த விவரத்தை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 27ஆம் தேதி வரை சென்னையில் மட்டும் மொத்தம் 25,25,905 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 20,109 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க தேவையான முன்னெடுப்புகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.