நம்பர் 1 தமிழ் நாடு என்ற நிலையை அடைய அமீரகப் பயணம்- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (18:35 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தனது துபாய் சுற்றுப் பயணத்திற்காக துபாய்க்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் மு க ஸ்டாலின் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளார். 192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு அரசு கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. இந்த அரங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும்பொருட்டு துபாய் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்திய துணைத்தூதர் அமன் பூரி வரவேற்றார். மேலும் ஸ்டாலின் பயணத்திற்காக துபாய் அரசு பிஎம்டபிள்யூ கார் வழங்கியுள்ளது.

 இ ந் நிலையில்,  நம்பர் 1 தமிழ் நாடு என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் எனவும், ஐக்கிய அரசு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் மற்றூம் வெளி நாட்டு வர்த்தகத்துறை இணை அமைச்சருடன் சந்திபபு  நடந்தது. இது தமிழக – அமீரக உறவுக்கு வலுவாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்