சாத்தான்குளம் காவல்நிலையம்… தினமும் அழிந்த சிசிடிவி காட்சிகள்! என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (17:02 IST)
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுக் காட்சிகள் தினமும் அழியும் வண்ணம் அமைக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் இருவரின் மரணத்துக்குக் காரணமானவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஒருமித்த குரல் எழுந்துள்ளது. இதையடுத்து இப்போது வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளது.

இதையடுத்து அவர்கள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை ஆய்வு செய்ததில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் தினமும் அழியும்படி கடந்த பிப்ரவரி மாதமே மாற்றப்பட்டுள்ளன. ஆனால் காவல்துறை விதிகளின் படி குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு காட்சிகளை அழிக்கக் கூடாது என சொல்லப்படுகிறது. இதற்கு யார் காரணம் எனக் கேள்வி எழுந்த நிலையில் அந்த நிலையத்தில் தொழில்நுட்பப் பிரிவு காவலர்கள் பணி காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் சிசிடிவி யார் கட்டுப்பாட்டில் இருந்தது என்ற குழப்பம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்