ரத்து செய்யப்படுமா கல்லூரி பருவ தேர்வுகள்? – விரைவில் ஆய்வுகுழு அறிக்கை!

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (11:44 IST)
தமிழகத்தில் பல்கலைகழக தேர்வுகளை ரத்து செய்வது குறித்து 11 பேர் கொண்ட ஆய்வுக்குழு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரிந்த்துள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான கல்லூரி பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. மீண்டும் தேர்வை நடத்துவது குறித்து பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்து வந்தன. இந்த நிலையில் தேர்வுகளை ரத்து செய்யலாம் என்ற பரிந்துரையை பல்கலைகழக மானிய குழு மத்திய அரசுக்கு அளித்துள்ளது.

செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. தமிழக அரசு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆட்வு செய்து அறிக்கை சமர்பிக்க 11 பேர் கொண்டு கல்வி நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது. பல்கலைகழக துணை வேந்தர்கள் உள்ளிட்டோர் உள்ள இந்த குழுவினர் விரைவில் இதுகுறித்த அறிக்கை சமர்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யலாமா என்பது குறித்து தெரிவிப்பத்துடன், கல்லூரிகளை எப்போது திறப்பது? வரும் கல்வியாண்டில் எத்தனை நாட்கள் கல்லூரி நடத்துவது? போன்ற முடிவுகளும் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்