#Breaking; என் காரை எடுத்து போங்க.. ஆனா அங்க மட்டும் போகாதீங்க! – எடப்பாடியாரிடம் பேசிய உதயநிதி!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (13:47 IST)
சட்டமன்ற கூட்டத்தில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின் தனது காரை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எடுத்து செல்லலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள், திட்டம் குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. முந்தைய சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தபோது தவறுதலாக தன் காருக்கு பதிலாக திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற சென்ற சம்பவம் அச்சமயம் வைரலானது.

இந்நிலையில் அதை சுட்டிக்காட்டி இன்று சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் “இன்று சட்டமன்ற கூட்டத்தில் நான் பேசும்போது எதிர்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்யாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

என்னுடைய காரை எப்போது வேண்டுமானாலும் எதிர்கட்சி தலைவர் எடுத்து செல்லலாம். எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள். ஆனால் எனது காரில் கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள். நான்கூட கடந்த 3 நாட்கள் முன்பாக உங்கள் காரில் ஏற பார்த்தேன்” என நகைச்சுவையாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்