கிளைமாக்ஸ் இன்னும் பெண்டிங் இருக்கே... உதயநிதி சூசகம்!!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (15:46 IST)
திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்க போவது திமுகதான் என சூசகமாக சொல்லியுள்ளார். 
 
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் இலவச கணினி பயிற்சி மையத்தை நிறுவினார். இந்த நிகழ்வில் பங்கேற்றார் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின். அப்போது அவர் பேசியது பின்வருமாறு....
 
உள்ளாட்சித் தேர்தலில் திமுக அடைந்துள்ள வெற்றி வெறும் இண்டெர்வல் தான், வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தான் கிளைமாக்ஸை பார்க்கப்போகிறீர்கள். 
 
மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தலில் திமுகவில் வெற்றி பெற்ற சிலரே காலை வாரிவிட்டார்கள். இருப்பினும் அவர்களை பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்