முடங்கியது இரட்டை இலை சின்னம். தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (23:37 IST)
இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோருவதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது.





சசிகலா அதிமுக மற்றும் ஓபிஎஸ் அதிமுக ஆகிய இரு அணி தரப்பிலும் இன்று  தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஜோதி, ரவாக் ஆகிய 3 பேர் பெஞ்ச் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

பல மணி நேர விசாரணைக்கு பின்னர் இரட்டை இலை சின்னத்தை, எந்த அணிக்கும் அளிக்காமல் முடக்கிவைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் இரு அணிகளுக்குமே பெரும் பின்னடைவு என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்