வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இந்த மாதம் முழுவதுமே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மீண்டும் ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ள நிலையில், அன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், மழையால் மாநாடு பாதிக்கப்படும் என்றும் அதனால் மீண்டும் ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், மாநாடு ஒத்திவைக்க வாய்ப்பே இல்லை என்றும், திட்டமிட்டபடி மாநாடு சிறப்பாக நடக்கும் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.