இதுக்கு ஒரு என்டே இல்லையா? 4 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (16:03 IST)
கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது என்பதும், இதனை அடுத்து தீவிர சோதனைக்கு பின்னர் அந்த மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், தற்போது திருச்சியில் நான்கு பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கம் போல இதுவும் ஒரு புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மிரட்டல் வந்த நிலையில், இன்று திருச்சியில் உள்ள நான்கு பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்ததாக, திருச்சி மாநகர காவல் பிரிவினருக்கு தகவல் வெளியானது.

உடனடியாக அந்த நான்கு பிரபல ஓட்டல்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் எந்தவிதமான ஆபத்தான பொருட்களும் இல்லை என்பதும், ஹோட்டல் அறைகள், வளாகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார், எந்த ஐபி முகவரியில் இருந்து இமெயில் அனுப்பியுள்ளார் என்பதைக் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்