சசிக்கலாவை சந்திக்க அனுமதி கிடைக்குமா? – காத்திருப்பில் டிடிவி தினகரன்!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (10:43 IST)
சசிக்கலா உடல்நல கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை சந்திக்க அனுமதி கோடி டிடிவி தினகரன் காத்திருப்பில் உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா சிறை தண்டனை முடிந்த நிலையில் வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ளார். அவரது விடுதலையை எதிர்நோக்கி பலர் காத்துள்ள நிலையில் அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நலமுடன் உள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை நடைபெறுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், அவரை காண அவரது சகோதரரும், அமமுக பொது செயலாளருமான டிடிவி தினகரன் பெங்களூர் விரைந்துள்ளார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிக்கலாவுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்ததாகவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறை துறை கூறியிருப்பதாக கூறியுள்ளார். மேலும் சசிக்கலாவை சந்திக்க உள்ளூர் காவல் நிலையத்தின் அனுமதி தேவை என்பதால் அனுமதி கோரி காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்