டிடிவி தினகரனின் இரட்டை இலை வழக்கு: முக்கிய சாட்சி தற்கொலை!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (14:58 IST)
டிடிவி தினகரனிடம் இடைத்தரகர் சுகேஷ் என்பவர் லஞ்சம் வாங்கி இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக தொடரப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் வழக்கின் விசாரணைக்காக அழைக்கப்பட்ட முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இடைத்தரகர் சுகேஷ், டிடிவி தினகரனிடம் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக வழக்கறிஞர் கோபிநாத் சாட்சி கூறியிருந்த நிலையில் தற்போது அவர் திடீரென தற்கொலை செய்து உள்ளது இந்த வழக்கின் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்