இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட ஆப்களை தடை செய்ய முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “ரம்மி, போக்கர், லுடோ, கால் ப்ரேக் என பல்வேறு சூதாய்ய செயலிகளின் விளம்பாங்கள் கடந்த சில நாட்களாக நாளிதழ்களில் வெளியாகி வருகின்றன. சினிமா, விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொலைக்காட்சிகளில் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.
அதனால், ஃபேண்டஸி, லூடோ, போக்கர், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை விதிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது சூதாட்டத்தை ஒழிக்கும் வகையில் உரிய சட்டம் இயற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.