மார்ச் 15ல் புதிய கட்சி: டிடிவி தினகரன் முடிவு

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (13:05 IST)
நீதிமன்றத்தின் மூலம் குக்கர் சின்னத்தை கைப்பற்றிய டிடிவி தினகரன், இன்று குக்கர், நாளை இரட்டை இலை என்று ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் தற்போது புதிய கட்சியை அவர் அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

தனது புதிய கட்சிக்கு ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் பரிந்துறை செய்திருந்த அனைத்து இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆா். அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆா். முன்னேற்ற கழகம் ஆகிய மூன்றில் ஒன்றை தனது கட்சியின் பெயராக டிடிவி தினகரன் அறிவிக்க உள்ளதாகவும், வரும் 15ஆம் தேதி மதுரையில் அவர் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனது புதிய கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னத்தை வைத்து கொள்ள முடிவு செய்துள்ள தினகரன், வரும் உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்துள்ளார், ஆர்.கே.நகரை போல் அவருக்கு மற்ற இடங்களிலும் வெற்றி கிடைக்குமா? என்பது மக்களின் முடிவை பொறுத்தே உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்