சசிகலா காரில் அமமுக கொடி இல்லாமல் அதிமுக கொடி: டிடிவி கூறுவது என்ன??

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (09:31 IST)
டிடிவி தினகரன் சசிகலா காரில் அமமுக கொடி இல்லாமல் அதிமுக கொடி இருப்பது குறித்து விளக்கமளித்துள்ளார். 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா  மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் டிடிவி தினகரன் இது குறித்து கூறியுள்ளதாவது, ஒரு வாரம் ஓய்வெடுத்த பின்பு சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். அதிமுக கொடியை பயன்படுத்தும் உரிமை சசிகலாவுக்கு உள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான். பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு உள்ளது. ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுப்போம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதிமுகவை மீட்டெடுக்க தான் அமமுக உருவாக்கப்பட்டது என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்