பொறுத்திருந்து பார்ப்போம்: சசிகலா வருமை குறித்து பிரேமலதா கருத்து!

ஞாயிறு, 31 ஜனவரி 2021 (14:15 IST)
சசிகலாவின் வருகை அதிமுகவின் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆனாலும் அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
 
இந்த நிலையில் அதிமுக கொடியுடன் உள்ள காரில் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை அவர் கைப்பற்ற தேவையான திட்டம் வைத்திருப்பதாகவும் மறைமுகமாக இது குறிக்கிறது என அமமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இன்னும் தேமுதிக உறுதி செய்யப்படாத நிலையில் சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அதிமுகவை ஒருவேளை சசிகலா கைப்பற்றி விட்டால் அதன் பின்னர் அவர் எடுக்கும் முடிவு தான் கூட்டணி முடிவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்