பயணங்கள் முடிவதில்லை! மாற்றம் முன்னேற்றம்... பாமக கடந்து வந்த கூட்டணி பாதை

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (17:29 IST)
டாக்டர். ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என முடிவு செய்துள்ளது.   வரும்         நாடாளுமன்ற தேர்தலில்    இரு கட்சிகளுமே   கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் பாஜகவும் உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவை ஊழல் கட்சி என கடுமையாக விமர்சித்துவந்த ராமதாஸ், இனி அதிமுக, திமுகவுடன் கூட்டடணி இல்லவே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். 
அதன்படி கடந்த 2014ம் ஆண்டு தேமுதிக, பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. கடந்த தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி மட்டும்       வெற்றி 
பெற்றார்.  இந்நிலையில் இப்போது பாஜக மட்டுமில்லாமல், அதிமுகவுடணும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க பாமக முடிவெடுத்துள்ளது.
 
இதனால் சமூக வலைதளங்களில் பாமகவின் நிலைப்பாட்டை பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் பாமக கடந்த 20 ஆண்டுகளில் மாறிய கூட்டணி விவரங்கள் பட்டியலையும் வெளியிட்டு சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
பாமக கூட்டணி விவரம்
1998-அதிமுக
1999-திமுக
2001-அதிமுக
2004-திமுக
2009-அதிமுக
2011-திமுக
2014-பிஜேபி
2019-அதிமுக
 
இந்நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதால் பாமகவை கிண்டலடித்ம்து இதுகுறித்த மீம்ஸ்கள் தற்போது டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 


 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்