கூட்டாஞ்சோறு விளையாட்டில் விபரீதம்; சானிட்டைசரால் சிறுவன் கருகி பலி!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (12:47 IST)
திருச்சியில் கூட்டாஞ்சோறு விளையாடிய சிறுவன் விபத்தாக பற்றி எரிந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் வீடுகளிலேயே அடைபட்டு கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் சில சமயம் அக்கம்பக்கத்து குழந்தைகளுடன் இணைந்து விளையாடி வருகின்றனர்.

திருச்சி ஈ.பி காலணி பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் என்ற சிறுவன் சக சிறுவர்களுடன் கூட்டாஞ்சோறு செய்து விளையாடியுள்ளான். கூட்டாஞ்சோறு சமைக்கும் அடுப்பை பற்ற வைக்க சானிட்டைசரை சிறுவன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் விபத்தாக நெருப்பு சிறுவன் மேல் பரவியதால் சிறுவன் பரிதாபமாக உடல் கருகி இறந்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்