நீதிமன்ற தீர்ப்பை மீறி வேலை நிறுத்தம்: போக்குவரத்து ஊழியர்கள் அதிரடி!!

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (19:58 IST)
போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பேருந்துகள் இன்றி பயணத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. 
 
இதனையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரித்தது. 
 
ஆனால், தொழிற்சங்க தரப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை. வந்த பிறகு அதற்கு ஏற்ப போரட்டம் குறித்து திட்டமிடப்படும். அதே நேரம் பணியில் சேராவிட்டால் வேலை நீக்கம் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். எங்கள் வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்