சென்னையில் பைக் டாக்சிகளுக்கு தடையா? போக்குவரத்துத் துறை ஆணையர் தகவல்..!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (11:06 IST)
சென்னையில் பைட் டாக்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தி வரும் நிலையில் வழிகாட்டுதல் அறிவிப்பு வெளியாகும் வரை பைக் டாஸ்க் தடை என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். 
 
நேற்று நடைபெற்ற வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ வாகன ஓட்டுநர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகள் குறித்த பேச்சு வார்த்தையில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
 
ஆனால் பைக் டாக்ஸிகளை அனுமதிக்கவும் தடுக்கவும் இதுவரை சட்டம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் சொந்த பயன்பாட்டுக்கான பைக்குகளை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானது என்றும் அதன் அடிப்படையில் பைக் டாக்சி இயக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 
 
இந்த நிலையில் இது குறித்து போக்குவரத்து ஆணையர் மேலும் கூறிய போது பைக் டாக்சிகள் குறித்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியாகும் வரை அதை இயக்க வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் என்றும் கூறினார்.
 
 ஆனால் தொழிற்சங்கத்தினர் ஐந்து நாட்களுக்குள் பைக் டாக்சி இயக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த தவறினால்  அவர்களை நாங்களே பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்று கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்