ஆப்பிள் ஸ்டோரில் ரூ.4.10 கோடி மதிப்பிலான 436 ஐபோன்கள் திருட்டு: அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (10:59 IST)
அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் ரூபாய் 4.10 கோடி மதிப்பிலான ஐபோன்கள் திருடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சியாட் என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் ஸ்டோர் இயங்கி வருகிறது. இந்த ஸ்டோரில் சுவரில் துளையிட்டு 4.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 436 ஐபோன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து கடையின் சிஇஓ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இதனை இரண்டு நபர்கள் செய்துள்ளதாகவும் வணிக கட்டிடத்தின் வரைபடங்கள் திருடர்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். வழக்கமாக நகை பணம் மற்றும் வங்கியில் தான் கொள்ளை அடிப்பது உண்டு, ஆனால் முதல் முறையாக ஆப்பிள் ஸ்டோரில் திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்