பேனர்களில் கலரூ காட்டுவது யார்? டேட்டா பேஸ் ரிலீஸ் செய்த டிராஃபிக் ராமசாமி!

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (15:24 IST)
பேனர்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் டிராபிக் ராமசாமி, சுபஸ்ரீ உயிரிழப்புக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 
 
சென்னை பள்ளிகரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழ்கம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  
 
இந்த விபத்து அடிப்படையில், லாரி ஓட்டுநர் மனோஜ் என்பரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அந்த பேனரை அச்சிட்ட அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 
சுபஸ்ரீயின் மரணத்தால் அரசியல் கட்சி தலைவர்கள் இனி பேனர் வைக்க கூடாது என தங்களது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், சினிமாதுறையினருக்கும் பேனர் வைப்பதில் பொருப்புடைமை வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடி வரும் டிராபிக் ராமசாமி, சுபஸ்ரீ உயிரிழப்புக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதோடு ஒரு டேட்டா பேஸையும் வெளியிட்டுள்ளார். 
ஆம், பெரும்பாலும் அதிமுகவினர்தான் அதிக பேனர்களை வைக்கிறார்களாம். அதைத்தொடர்ந்து இந்து கோயில்கள் சார்பாக வைக்கப்படும் பேனர்கள் 2 ஆம் இடத்திலும், விஜயகாந்தின் தேமுதிக 3 வது இடத்திலும், பாமக 4வது இடத்திலும் உள்ளதாம். இதில் திமுகவும் இருக்கிறது.
 
சுபஸ்ரீயின் பரிதாப மரணத்திற்கு பின்னராவது அதிமுக அரசு திருந்திவிடும் என நான் நம்புகிறேன். திருந்தியே ஆக வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்