பிபிசி ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவோம்: டெல்லியில் டி.ஆர்.பாலு எம்.பி பேட்டி

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (16:24 IST)
பிபிசி ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் பேசுவோம் என திமுக எம்பி டி ஆர் பாலு பேட்டி அளித்துள்ளார். 
 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சமூகமாக நடத்த அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த பேச்சு வார்த்தைக்கு பின் டெல்லியில் திமுக எம்பி டிஆர் பாலு பேட்டி அளித்தார்.
 
இந்த பேட்டியில் அவர் நீட் தேர்வு விலக்கு குறித்து தமிழக முதல்வர் அனுப்பிய கடிதம் கொடுத்து பாராளுமன்றத்தில் பேசுவோம் என்றும் அதேபோல் குஜராத் கலவரம் தொடர்பான பிவிசி ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவோம் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் இலங்கை கடற்படை தினந்தோறும் தமிழக மீனவர்களை தாக்கி வரும் சூழலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவோம் என திமுக பாடல் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்