எனது தலைவரை திட்டினால் கையை வெட்டுவேன்: திமுக எம்பி டிஆர் பாலு

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (15:46 IST)
எனது கட்சித் தலைவரை திட்டினால் கையை வெட்டுவேன் என திமுக எம் பி டி ஆர் பாலு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய திமுக எம்பி டிஆர் பாலு அவர்கள் எனது கட்சி தலைவரை திட்டினாலோ அல்லது தீண்டினாலோ கையை வெட்டுவேன் என்று கூறினார் 
 
அது எனது தர்மம் என்றும் அதன் பிறகு நீங்கள் கோர்ட்டில் சென்று என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் ஆனால் என் தலைவரை திட்டினால் கண்டிப்பாக கையை வெட்டுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு எம்பி கையை வெட்டுவேன் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பேச்சுக்கு ஆதரவு மற்றும் எதற்கு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்