ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்த ஓபிஎஸ்

சனி, 28 ஜனவரி 2023 (13:51 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திமுக அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் அதிமுகவின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக சமீபத்தில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது என்பதும் இந்த பணிக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் இருந்தார்கள் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது அதிமுகவின் ஓபிஎஸ் பிரிவு தேர்தல் பணி குழுவை அமைத்துள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளுக்காக ஓ பண்ணி செல்லும் அணியின் சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் அதைவிட ஒரு நபர் அதிகமாக 118 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை ஓபிஎஸ் அணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்