24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (07:28 IST)
வங்க கடலில் உருவாகிய மான்டஸ் புயல் தமிழக கடற்கரையை நோக்கி நெருங்கி வருவதன் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை உள்பட பெரும்பாலான  பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களின் விபரங்கள் பின்வருமாறு:
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்