வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை அறிவிப்பு..!

Siva
புதன், 25 செப்டம்பர் 2024 (07:57 IST)
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதை அடுத்து, இன்று, அதாவது செப்டம்பர் 25ஆம் தேதி, தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், வட தமிழகத்தில் சில பகுதிகளிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் சில பகுதிகளில் அதிக வெப்பம் இருக்கும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின்படி, சென்னை மணலியில் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்