தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், மேற்கு ராஜஸ்தான் மற்றும் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழைக்கான சூழல் சாதகமாகியுள்ளது.
எனவே அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது நாளை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.