சென்னையில் 111 நாட்களாக உயராத பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (07:59 IST)
சென்னையில் கடந்த 111 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னை உள்பட இந்தியா முழுவதும் உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தாலும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 
 
மேலும் பெட்ரோல் டீசலுக்கான வரியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்னும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்