இன்று மிலாடி நபி விடுமுறை நாள்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

Mahendran
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (10:28 IST)
சென்னை மெட்ரோ ரயில் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் குறைவாக இயக்கப்படும் நிலையில் இன்று மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சனி ஞாயிறு கிழமைகளில் இயக்குவது போல் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மிலாடி நபி திருநாள் (செப். 17) அன்று, சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (செப். 17) அன்று, மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும். அதாவது 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல், காலை 5 மணி முதல் 8 மணி வரை, 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்