தொடர்ந்து குறையும் தங்கம் விலை; இன்றைய நிலவரம்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (11:44 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியது. இதனால் வேகமாக விலை உயர்ந்த தங்கம் கடந்த மாதம் உச்சபட்சமாக 40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த இரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து ரூ.39,016க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.34 குறைந்து ரூ.4,877 ஆக விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்