மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

Siva

வியாழன், 23 ஜனவரி 2025 (18:41 IST)
மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறுவதற்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த தடையை தற்போது தீர்ப்பாயம் நீக்கி உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் தனி உரிமை கொள்கைகளை புதுப்பித்த நிலையில் வாட்ஸ்அப் பயனர்கள் தரவுகளை மெட்டா மற்றும் சில செயலிகளுக்கு விளம்பர நோக்கத்தாக பகிர்வதாக குற்றச்சாட்டு இருந்தது.

 இது குறித்து விசாரணை செய்த இந்திய போட்டி ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தகவல் பரிமாற மெட்டா நிறுவனத்திற்கு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மெட்டா நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் சிசிஐ உத்தரவுக்கு தடை விதித்தது. ஆனால் அதே நேரத்தில் வழக்கு தொடர்ந்து  விசாரணை செய்யப்படும் என்றும் இந்த தடையால் வாட்ஸ் அப் நிறுவனத்தின் வணிக உத்திகள் சீர்குலைய வாய்ப்பு இருப்பதால் தடை நீக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்