இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த வழக்கில், டெல்லி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார்.
இரட்டை இலை சின்னத்தை பெற, டெல்லியை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும், அதற்காக ரூ.10 கோடியை முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும், டிடிவி தினகரன் மற்றும் அதற்கு உடைந்தையாக இருந்த அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் அவர்களை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
பின்பு அவர்கள் இருவர் தரப்பிலும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்லலாம் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இன்று டெல்லி நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆஜராகியுள்ளனர்.