தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (08:15 IST)
தமிழகத்தில் இன்று 17 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறவுள்ளது. இன்று * காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரை 2 மணி நேரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை அரசு மருத்துவமனைகள், நிலக்கோட்டை சுகாதார நிலையத்தில் ஒத்திகை நடப்பதாகவும், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி சமாதானபுரம் சுகாதார நிலையங்களில் ஒத்திகை நடக்கிறது என்றும், தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி, இஎஸ்ஐ மருத்துவமனை, பிஎஸ்ஜி மருத்துவமனை, சூலூர் மருத்துவமனையில் ஒத்திகை நடப்பதாகவும், அதேபோல்  புலுவம்பட்டி அரசு சுகாதார நிலையம், SLM ஹோம் சுகாதார நிலையத்திலும் தடுப்பூசிக்கான ஒத்திகை நடக்கிறது என்றும் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது
 
நெல்லக்கோட்டை , நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி, சமாதானபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்